Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு..! சமூக விரோதிகள் ஆதிக்கம்..! இபிஎஸ் கடும் விமர்சனம்.!!

Senthil Velan
வியாழன், 30 மே 2024 (13:50 IST)
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 36 மாதங்களில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கைகளை விட சமூக விரோதிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 
 
இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்காததன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து 36 மாதங்களாக கொலை, கொள்ளை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளார்
 
29/5.2024 அன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரே இரவில் ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுகிறது என்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.  
 
மது போதையில் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் வண்ணாரப்பேட்டையில் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்
 
மாணவர்களுக்கிடையே வெட்டுக்குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் அம்பத்தூரில் நடைபெற்ற போதை மாத்திரை விற்பனை அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.
 
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர்,  சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இதுபோன்ற சட்ட ஒழுங்கு சார்ந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். 
 
எனவே தமிழக முதலமைச்சர் தமிழக காவல்துறைக்கு இனியாவது சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 36 மாதங்களில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கைகளை விட சமூக விரோதிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி சேனல்கள் நீக்கம்: கேபிள் ஆப்பரேட்டர்கள் அதிரடி..!

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?

மாயமான 7 போலீசார் திரும்பி வந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

அடுத்த கட்டுரையில்