Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (09:57 IST)
சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
 
இந்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேகர் ரெட்டி, தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் உடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் சேகர் ரெட்டி ஆளும் கட்சியை சேர்ந்த பலருடனும் நெருக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக தலைமைச்செயலாளர் வீட்டில் நடத்தப்பட்டு வரும் இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பல அதிரடி சோதனைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது நடந்து வரும் இந்த சோதனை எவ்வளவு நாட்கள் நீட்க்கும் என்பது தெரியவில்லை.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

500 பில்லியன் முதலீடு.. 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எல்லாமே அமெரிக்காவில் தான்: ஆப்பிள் அறிவிப்பு..!

குடிபோதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொருவருக்கு மாலை அணிவித்த மணமகன்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு..!

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments