Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர் விட்ட விஜயபாஸ்கர்: தப்பிக்க வருமான வரித்துறையிடமே ஐடியா கேட்ட பரிதாபம்!

கண்ணீர் விட்ட விஜயபாஸ்கர்: தப்பிக்க வருமான வரித்துறையிடமே ஐடியா கேட்ட பரிதாபம்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (13:28 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்திய பின்னர் நேற்று அவரை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.


 
 
இந்த விசரணையை எதிர்கொள்ள முடியாமல் விஜயபாஸ்கர் விழிபிதுங்கி போனதாக தகவல்கள் வருகின்றன. இந்த விசாரணையின் தொடக்கம் முதலே வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கினார் விஜயபாஸ்கர்.
 
இந்த விசாரணையில் முதல் கேள்வியே 89 கோடிகள் உங்களுக்கு எப்படி வந்தது என்றுதானாம். ஆனால் அதற்கு உரிய பதிலை அளிக்காத விஜயபாஸ்கர் பல கேள்விகளுக்கு சம்மந்தமில்லாமல் பதில் கூறி கேள்வியை திசை திருப்பினார்.
 
அதன் பின்னர் வருமான வரித்துறையினர் தங்கள் அனுகுமுறையை மாற்றியதாக கூறப்படுகிறது. உங்களை ஒரே நாளில் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேரிதல்களிலேயே சிக்க வேண்டிய ஆள் என கூறியதும் விஜயபாஸ்கருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.
 
மேலும் கரூர் அன்புநாதனுக்கும் உங்களுக்குமிடையே நடந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அமலாக்கத் துறையிடமிருக்கிறது என ஒவ்வொன்றாக வருமானவரித்துறை புட்டுபுட்டு வைக்க ஆடிப்போய்விட்டார் விஜயபாஸ்கர்.
 
பலமாதமாக உங்களின் நடவடிக்கையை கண்காணித்து வருகிறார்கள் எனவே பொய்யான தகவலை சொல்ல வேண்டாம் அனைத்திற்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் சிக்க வேண்டிய இடத்தில் சிக்குவீர்கள் என வருமான வரித்துறை விஜயபாஸ்கரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
 
வருமான வரித்துறையின் இந்த கிடுக்குபிடியால் விஜயபாஸ்கரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. கையில் வைத்திருந்த கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்த விஜயபாஸ்கர் பல்வேறு அமைச்சர்கள் சந்தப்பட்ட விவகாரங்கள், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களை கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் தான் வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்த விஜயபாஸ்கர், இந்த பிரச்னையிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது குறித்து வருமான வரித்துறையினரிடமே ஆலோசனை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments