Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ்-க்கு சொந்தமாக ஒரு தீவு இருக்கு: போட்டுக்கொடுத்த விஜயபாஸ்கர்!

ஓபிஎஸ்-க்கு சொந்தமாக ஒரு தீவு இருக்கு: போட்டுக்கொடுத்த விஜயபாஸ்கர்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (16:52 IST)
கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக கூறியிருந்தனர்.


 

 
 
7-ம் தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சேகர் ரெட்டி அளித்த தகவலினை வைத்து விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை நடத்தினர் வருமான வரித்துறை அதிகாரிகள். தேர்தலுக்கு செலவுகள் செய்த ஆவணங்களை தாருங்கள், சேகர் ரெட்டியிடம் எவ்வளவு கொடுத்துருக்கிங்க? என பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டனர் வருமான வரித்துறையினர்.
 
இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், கேட்ட கேள்விக்கு உரிய பதிலை கூறாமல், சார் ஒபிஎஸ்ஸிடமும் பணம் கொடுத்துள்ளேன், ஒபிஎஸ் பணம்தான் சேகர் ரெட்டியிடம் இருக்கு. நத்தம் விசுவநாதன், ஒபிஎஸ், இருவரும் ஒரு தீவு வாங்கியிருக்காங்க சார் என்று போட்டுக்கொடுத்தார் விஜயபாஸ்கர். ஆனால் அதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஓபிஎஸ் பற்றி பேசாதீர்கள், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என கூறினர்.
 
வருமான வரித்துறையினரிடம் நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவும். மீண்டும் விஜயபாஸ்கரை வரவழைத்து வழக்கை அமலாக்க துறையினருக்கு மாற்றி அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments