Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (07:33 IST)
தமிழகம் முழுவதும் 166 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடக்கி வைக்கிறார். தமிழகத்தில் முதற்கட்டமாக 5.36 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது
 
அதேபோல் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் 3000 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக தமிழகத்திற்கு 5 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 20,000 கோவாக்சீன் தடுப்பூசிகளும் வந்து சேர்ந்துள்ளன என்பது தெரிந்ததே. இந்தத் தடுப்பூசிகளின் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments