Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை

சீனாவில் முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை
, சனி, 17 ஏப்ரல் 2021 (00:34 IST)
சீனாவிலிருக்கும் சில மாகாணங்களில் இறந்தவர்களை புதைக்க தடை உள்ளது. அதையும் மீறி இறந்தவரின் விருப்பப்படியே ஆவரை புதைக்க வேண்டும் என்பதற்காக, டவுன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடுள்ள ஒருவர், கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்தவருக்கு பதிலாக எரியூட்டப்பட்டு இருக்கிறார்.
 
தென் கிழக்கு சீனாவின் ஷான்வீ பகுதியைச் சேர்ந்த ஒருவர் 2017-ம் ஆண்டு புற்றுநோயால் இறப்பதற்கு முன், தன்னை பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். சீனாவின் சில பகுதிகளில் இறந்தவர்களை புதைப்பதற்கு தடை உள்ளது. எனவே இறந்தவருக்கு பதிலாக ஒரு பிணத்தை எரித்து விட்டு, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது குடும்பம் ஒரு நபருக்கு பணம் கொடுத்தது.
 
குடும்பத்தினர் பணம் கொடுத்த நபர் ஒரு பிணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, அவரே ஒருவரை கொலை செய்து, அந்த உடலை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு, செப்டம்பரில் அக்குடும்பத்தினர் பணம் கொடுத்து பிணத்தை ஏற்பாடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பணம் கொடுத்த நபரின் பெயர் ஹுவாங் என்றும் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மேல்முறையீடு செய்ய ஏதுவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
2017ஆம் ஆண்டில் கொலை சம்பவம் நடந்திருந்தாலும், கடந்த வாரம் வெளியான ஒரு கட்டுரை மூலம் தான், சீனாவின் இணைய உலகில் இந்த வழக்கு அதிக கவனத்தை ஈர்த்தது. அந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு பற்றிய கதையை விவரிக்கிறது இந்த காணொளி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ....காவல்துறை நூதன வியூக யுக்தி