Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டுத்துறையில் மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம்..! உதயநிதி ஸ்டாலின்..

Senthil Velan
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:56 IST)
விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச,  தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.16.31 கோடி மதிப்பில் 601 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
 
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றார்.
 
தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கு பாராட்டும் அங்கீகாரமும் குவிந்து வருகிறது என்றும், விளையாட்டுத்துறையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்,
 
கடந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு விருது பட்டியலில் 8-வது இடத்தில் இருந்தது. தொடர்ந்து,  இந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 38 தங்கப்பதக்கம் 39 வெண்கல என மொத்தம் 98 பதக்கங்கள் வென்று, தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

ALSO READ: வாகனத்தில் 205 கிலோ குட்கா கடத்தல்..! துரத்தி சென்று பிடித்த போலீசார்..
 
மேலும், விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை அடக்கம் செய்யும் போது கணவர் மறைவு.. 55 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி..!

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments