Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம்: தி.மு.க. என்றால் கொம்பு முளைத்தவர்களா? ஈபிஸ் கண்டனம்

Mahendran
புதன், 5 பிப்ரவரி 2025 (10:52 IST)
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
 
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
 
போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?
 
தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா திரு. 
@mkstalin
 அவர்களே?
 
உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறிய கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்தால் 10 ஆண்டு சிறை: அமைச்சர் எச்சரிக்கை..!

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் 63 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்ததால் பரபரப்பு..!

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் திடீர் நீக்கம்.. மீண்டும் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..!

சொல்லியும் கேட்காத ஜெர்மனி பயணி.. அடித்து கொன்ற காட்டுயானை! - வால்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments