Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் டூ மகாராஷ்டிரா சென்ற கள்ளக்காதல்: எரித்து கொலை செய்த லாரி டிரைவர்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (14:54 IST)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிகுழி கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்னும் 35 வயதுடைய திருமணமான பெண்ணை அவரது வீட்டின் அருகில் உள்ள கலிய பெருமாள் என்னும் லாரி டிரைவர் மகாராஷ்டிரா அழைத்து சென்று எரித்துக் கொன்றுள்ளார்.


 
 
மேலணிகுழி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி தான் அம்பிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் அம்பிகாவை காணவில்லை.
 
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்களுக்கு மகாராஷ்டிரா காவல் நிலையத்தில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.
 
அதில் அம்பிகா, லட்டூர் பகுதியில் உள்ள கருவேலந்தோப்பில் எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த தகவலை தெரிவித்தனர். இந்த கொலை குறித்த விசாரணையில் அம்பிகாவின் வீட்டருகே வசித்த கலியபெருமாள் தான் அம்பிகாவை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அம்பிகாவுக்கும், கலியபெருமாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாளுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனை அறிந்த அம்பிகா, நீ என்னுடன் தான் வாழ வேண்டும் என கூறி வற்புறுத்தியுள்ளார்.
 
அம்பிகாவை திருமணம் செய்ய விரும்பாத கலியபெருமாள் நான் மகாராஷ்டிராவிற்கு லாரியில் லோடு ஏற்றி செல்கிறேன் என்னுடன் வா என அம்பிகாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அழைத்து சென்று லாட்டூர் பகுதியில் உள்ள கருவேலந்தோப்புக்கு அழைத்து சென்று எரித்து கொலை செய்துள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments