மறக்க முடியவில்லை: கதறி அழும் விஜய்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (18:20 IST)
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார்.  
 
பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. 
 
இது குறித்து அபிராமியின் கணவர் விஜய் கூறியது பின்வருமாறு, அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். 
 
நான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு அவர்களை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகிறேன் என்று தீராக் கண்ணீரோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

திடீரென சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! அடுத்த 2 மணி நேரத்துக்கு எச்சரிக்கை:

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments