Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் பாரிவேந்தர்

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (17:26 IST)
திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்ற ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாக நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட போவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் இன்று கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகிறார்
 
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முத்தரசன் அவர்களை சந்தித்த பாரிவேந்தர் அவரிடம் ஆதரவும் ஆசியும் பெற்ற பின்னர் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அக்கட்சியின் பொதுச்செயாளர் வைகோவை பாரிவேந்தர் சந்தித்தார். 
 
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்றும், பெரம்பலூரில் பாரிவேந்தர் வெற்றி பெற்று தமிழகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பார் என்றும், மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.
 
முன்னதாக மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ ஆகியோரை சந்தித்து வாழ்த்து பாரிவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments