Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலியில் வைரமுத்து பாட்டெழுதியிருந்தால்?: வானொலி தொகுப்பாளியின் கற்பனை

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (14:21 IST)
கபாலி ஒரு தோல்விப்படம் என்று கவிஞர் வைரமுத்து பேசியதாக செய்திகள் வெளியானது. அதுபற்றி விளக்கம் கொடுத்த வைரமுத்து, பேசும் போது, ஒரு வார்த்தை விட்டுப் போய்விட்டதாகவும், அதை சர்ச்சை ஆக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். 


 

 
இந்நிலையில், ஒருவேளை கபாலி படத்தில் வைரமுத்து பாட்டெழுதியிருந்தால், அவர் எப்படி பேசியிருப்பார் என்று ஒரு தனியார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினி தன்னுடைய முகநூல் பக்கத்தில் கற்பனையாக எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ளதாவது:
 
கபாலியில் பாடல் எழுதாத வைரமுத்துவின் பேச்சு நீங்கள் கேட்டீர்கள் ஒரு வேலை அவர் பாடல் எழுதியிருந்தால்....
 
வைரமுத்து பாணியில் படியுங்கள் ஓகே..
 
கபாலி
க- கடமை
பா- பாலிசி
லி- லீடர் சிப்
 
கடமை என்னும் பாலிசியே இவனுடைய லீடர்சி...
 
இயக்குனர் ரஞ்சித் அவர்கள் ரஜினியை இந்த கதைக்காக இவ்வளவு அழகாக செதுக்கியிருப்பார் என்று எனக்கு நிச்சயம் தெரியும், அது ரஜினியின் ரசிகனாக இருக்கும் ரஞ்சித்தால் மட்டுமே முடியும். இவன் தமிழன் அல்ல ஆனாலும் தமிழனுக்காக முந்தி நிற்பவன்...
 
இவன் ஒரு பாட்டாளி
 
பலர் மனதில் குடியிருக்கும் கூட்டாளி
 
மலேசியாவின் பப்பாளி
 
ரஞ்சித் வடிவத்தால் உயர்ந்த பெயரானது இந்த ‪#‎கபாலி‬ 
 
என்னைப் பாட்டெழுத அழைத்த போது சற்று யோசித்தேன் ரஞ்சித் இவர் எப்படி ரஜினியை இயக்கப்போகிறார் என்று, இப்போது தெரிகிறது பேசும் சத்தம் கேட்காமல் படம் எடுப்பது மணிரத்னம், தான் எடுக்கும் படங்களை பேசவைப்பவன் இந்த ரஞ்சித் என்னும் ரத்தினம்.
 
மொத்தம் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாரயணன் இசைத்திருக்கிறார் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இந்த சந்தோஷ் நாரயணன்... மலேசிய தமிழ் மக்களை மையமாக வைத்து படம் எடுக்கப்படிருக்கிறது நிச்சயம் மல்லுக்கட்ட காத்திருக்கிறான் இந்த கபாலி.... ரஜினி இமையத்தின் உச்சிக்கு சென்றவர்,
 
ரஞ்சித் பல இதயங்களின் உச்சிக்கே செல்லவிருப்பவர், இந்த இரண்டு
 
"ர" வும் சேர்ந்து தமிழ் சினிமாவை வேறு உச்சிக்கே கொண்டு செல்லப்போகிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கபாலி இனி இந்த பெயர் பல முதலாளிகளின் பெயராக இருக்கும்.
 
கபாலி இனி இது பல தெருக்களின் பெயராக இருக்கும்.
 
கபாலி பள்ளிகளில் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவன் பெயராக இருக்கும். கபாலி நிச்சயம் ரஜினிக்கு ஒரு பெயராக இருக்கும் நன்றி வணக்கம்.....
 
இப்படித்தான் வைரமுத்து பேசியிருப்பார் என்று அவர் கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் எழுதியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments