Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சரியான போலிசாக இருந்தால் என்னை சுடு’ - வைகோ சவால்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (18:44 IST)
மதுக்கடைகளை மூடும் போராட்டத்தில் கலந்துகொண்ட வைகோ ’சரியான போலிசாக இருந்தால் என்னை சுடு’ என்று காவல் துறையினரைப் பார்த்து சவால் விடுத்துள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தியாகி சசிபெருமாள் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடக் கோரி பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
 
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் அங்குள்ள மதுக்கடையை மூடும் வரை போராட்டம் நடத்த வந்தார். அப்போது, ஒருவர் செல்போன் டவர் மீது ஏறினார். இவரை பார்க்க அருகே சென்றபோது காவல் துறையினரும், தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
 
அப்போது, இங்கு நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. டாஸ்மாக் கடையை சூறையாடிய போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடியும், கண்ணீர் புகையும் வீசி விரட்டினர். மேலும், கூட்டத்தினரை கலைக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
பின்னர் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”போராட்டத்தின் இடையே அமைதி ஏற்பட்டதும் வைகோ பேசுகையில், நாங்கள் நியாயமான போராட்டம் நடத்தினோம். டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்துவோம் என நாங்கள் அறவித்தும், ஜெயலலிதா உத்தரவுப்படி மதுக்கடை போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
 
மதுக்கடைகள் அருகே சென்ற போது காவல் துறையினர் எங்கள் மீதும் என் மீதும் கண்ணீர் புகை வீசினர். சரியான போலீசாக காக்கிச்சட்டை போட்டிருந்தால் இப்போது என் மீது சுடு. தனியாக வருகிறேன். என்னை கைது செய்ய தயாரா? என்று பேசினார்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments