ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

Prasanth Karthick
திங்கள், 11 நவம்பர் 2024 (14:58 IST)

தமிழக அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு சீமான் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் அரசு கொண்டு வரும் பல திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு வருகிறது. இதை சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், உதவாத திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைத்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதாக விமர்சித்திருந்தார்.

 

அவரது விமர்சனத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும் பேசியிருந்தனர்.
 

ALSO READ: பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!
 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”அதிகாரம் என்பது நிலையானது அல்ல. இலங்கையிலும், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என பார்த்து வருகிறோம்.

 

அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட ஜெகன்மோகன் ரெட்டி அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தனது தந்தை ராஜசேகர் ரெட்டி பெயரை வைத்தார். ஆனால் என்ன நடந்தது? சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றிருந்தபோதே இங்கே ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைத்து தூர்க்கப்பட்டன. அந்த நிலை தமிழகத்திலும் நடைபெறலாம். தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் அனைத்தும் பொட்டலாகி விடும்” என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments