Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் பிறை தென்பட்டால் 12-ஆம் தேதி பொதுத் தேர்வு இருக்காது.! அமைச்சர் அன்பில் மகேஸ்..!!

Senthil Velan
வெள்ளி, 29 மார்ச் 2024 (16:12 IST)
ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ந் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.  அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிமுகப்படுத்தினார்.
 
கூட்டம் முடிந்து பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது என்றார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செல்கின்ற இடமெல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது என்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார். 

ALSO READ: ஓட்டுக்கு காசு கொடுப்பதா.? அரசியலை விட்டு சென்றிடுவேன்..! உணர்ச்சி பொங்கிய சீமான் ..!!
 
ஏப்ரல் 12-ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.  ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு,  மறுநாள் 12-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டால் அன்றைய தேதியில் பொதுத்தேர்வு இருக்காது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments