Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால்... முதலில் தேமுதிக களமிறங்கும் - பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (14:06 IST)
இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால்... முதலில் தேமுதிக களமிறங்கும் - பிரேமலதா விஜயகாந்த்

கடந்த வருடம் இறுதியில் சிஏஏ என்ற இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக அப்போது முதலே எதிர்க்கட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் போராடி வருகின்றனர்.  சமீபத்தில்   வடகிழக்கு டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது.
 
தற்போதுவரை 30 க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையால் இறந்துள்ளனர். வன்முறையைத் தூண்டும்படி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,நேற்று டெல்லி போலீஸார் தற்போது வன்முறையைத் தூண்டியவர்கள் மீது நவடிக்கை எடுக்க முடியாது என பதில் அளித்திருந்தனர்.
 
இந்நிலையில், இன்று, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அதில், சிஏஏ நாட்டின் பாதுக்காப்புக்காகத் தான்  நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய - மாநில அரசுகள் விளக்க வேண்டும்; இஸ்லாமியர்களுக்கு சிஏஏவால் எதாவது பாதிப்பு என்றால் தேமுதிக முதல் ஆளாக களமிறங்கும் என தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments