Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..! இபிஎஸ்

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (13:03 IST)
தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் மதுரைக்கு எந்த நல்ல திட்டங்கள் கொண்டு வரவில்லை என்றார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் தொழிற்நுட்ப பூங்கா அமைக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். 
 
அதிமுக ஆட்சியில் 1292 கோடியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டத்தை திமுக அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
 
இந்த ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாகவும், எல்லா வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாகவும், விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், திமுக ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட மக்களைக் காப்பாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
மதுரை விமான நிலைய ஓடுதளம் அண்டர் பாஸ் முறை திட்டத்திற்கு திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அவர் கூறினார்.

ALSO READ: முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு..! மார்ச் 22 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டார். மேகதாது அணை விவகாரத்தில் திமுக துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments