Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சிக்கு வந்தால் போலீஸாருக்கு 8 மணி நேரம் வேலை - அண்ணாமலை

Annamalai
Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (19:01 IST)
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்  போலீஸாருக்கு 8 மணி  நேரம் வேலை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆளுங்கட்சியின் மீதும், அரசின் மீதும் தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அண்ணாமலை தலைமையிலான பாஜக சமீபத்தில் திமுகவினர் மீதான ஊழல்  பட்டியல் வெளியிட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  வரும் பாராளுமன்றத் தேர்தல் தங்கள் தலைமையில் கூட்டணி என்று அறிவித்திருந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விலகி பாராளுமன்றத் தேர்தலிலும், இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, அடுத்தாண்டு வரவுள்ள  நாடாளுமன்றத் தேர்தலுக்கு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் போலீஸாருக்கு 8 மணி  நேரம் வேலை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பாஜக ஆட்சிக்கு வந்தால் போலீஸாருக்கு 8 மணி  நேரம் வேலை மற்றும் வாரவிடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மன உளைச்சல் இல்லாத வகையில் காவல்துறையை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments