சுட்டெரிக்கும் வெயில்: ஐஸ் விற்ற தொழிலாளி சுருண்டு விழுந்து பலி.. ராமேஸ்வரத்தில் சோகம்..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:37 IST)
ராமேஸ்வரத்தில் ஐஸ் விற்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர் வெயில் கொடுமையால் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெயில் காரணமாக சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது ராமேஸ்வரத்தில் ஐஸ் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கடும் வெயிலில் அந்த தொழிலாளி ஐஸ் விற்றுக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய வீட்டினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments