Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அர்ஜுனா விருது பெற்ற சதிஷ் சிவலிங்கத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

அர்ஜுனா விருது பெற்ற சதிஷ் சிவலிங்கத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (23:15 IST)
அர்ஜுனா விருது பெற்றுள்ள சதிஷ் சிவலிங்கத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாராடுதெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அர்ஜுனா விருது பெற்றுள்ள சதிஷ் சிவலிங்கத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியைச் சேர்ந்த இந்த பளு தூக்கும் வீரர் தமிழகத்திற்கும் இந்திய நாட்டுக்கும் புகழும் பெருமையும் தேடித் தந்துள்ளார்.
 
சதிஷ் சிவலிங்கம் மேலும் பல சாதனைகள் புரிந்து இன்னும் பல விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 

webdunia

 

 

Share this Story:

Follow Webdunia tamil