Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்தில் பலரின் முகத்திரை கிழியும் : எடப்பாடியாரை மிரட்டும் விஜயபாஸ்கர்?

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (08:21 IST)
புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் இன்னும் ஒரு வாரம் பொறுங்க பலரின் முகத்திரையை கிழித்தெரிவேன் என விஜயபாஸ்கர் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ சமீபத்தில் 2வது முறையாக ரெய்டு நடத்தினர். இதில் பல ஆவணக்கள் சிக்கியதாகவும் தெரிகிறது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த ஒரு நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
 
இதனால் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். அதுமட்டுமல்லாமல் அதிமுக அமைச்சர்களே சிலர் விஜயபாஸ்கரை ராஜினினாமா செய்யக்கோரி முதல்வர் பழனிச்சாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
 
ஆனால் எடப்பாடியாரை சந்தித்த விஜயபாஸ்கர் 30 எம்எல்ஏக்களுடன் டி.டி.வி.தினகரனுடம் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவேன் மிரட்டியதாக தகவல் வெளியானது. இதனால் பயந்துபோன எடப்பாடியார் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி வழங்கினார். ஊழல் வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டது பலரது விமர்சனத்திற்கு ஆளானது. 
 
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அடுத்த வாரம் புதுக்கோட்டையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஒரு லட்சம் பேருக்கு மேல் திரட்டி பலரின் முகத்திரையை கிழித்தெறிவேன் என ஆவேசமாக பேசினார்.
சமீபத்தில் புதுக்கோட்டையில் தினகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன் விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்து பேசியதாக தெரிகிறது.
 
ஆகவே விஜயபாஸ்கர் தினகரனை பழிவாங்க இப்படி பேசினாரா அல்லது எடப்பாடியாரை வழிக்கு கொண்டுவர இப்படி பேசினாரா என்பது அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மீட்டிங்கில் தான் தெரியும். எது எப்படி இருந்தாலும் இவரின் பேச்சால் அதிமுக கூடாரமே அதிர்ந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments