Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் எப்படா செத்தேன்? இரத்தக் கண்ணீர் விடும் சிரிப்பு நடிகர்

நான் எப்படா செத்தேன்? இரத்தக் கண்ணீர் விடும் சிரிப்பு நடிகர்

நான் எப்படா செத்தேன்? இரத்தக் கண்ணீர் விடும் சிரிப்பு நடிகர்
, செவ்வாய், 31 மே 2016 (15:38 IST)
நான் இறக்கவே இல்லை நலமாகவே உள்ளேன் என தன்னிலை விளக்கம் கூறியதோடு, இந்த தவறான தகவலை பரப்பிய நபர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் செந்தில் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 

 
தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவைக்கு மிகவும் புகழ் பெற்றவர் நடிகர் செந்தில். அரசியல் ஆர்வம் காரணமாக அவர் அதிமுகவில் இணைந்தார். சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என தேர்தல் காலங்களில் அதிமுக பிரச்சார பீரங்கியாக மாறிவிடுவார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும்கூட அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
 
இந்த நிலையில், நடிகர் செந்தில் இறந்து விட்டதாக கூறி சிலர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவலை பரவவிட்டனர். ஆனால் தான் சாகவில்லை என செந்தில் அப்போது மறுப்பு தெரிவித்தார்.
 
இந்த நிலையில், நடிகர் செந்தில் மீண்டும் இறந்து விட்ட தகவல் பரவியது. இதில், கடும் அதிர்ச்சியடைந்த நடிகர் செந்தில், மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று காலை புகார் அளித்தார். மேலும், இந்த வதந்திகளுக்கு திமுகவினரே காரணம் என அவர் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தியில் பாபர் மசூதி பிரச்சனைக்கு தீர்வு: மத தலைவர்கள் ஆலோசனை