2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறேன்: டி.ராஜேந்தர்

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (19:59 IST)
சட்டமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி ராஜேந்தர் தெரிவித்த நிலையில் அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்
 
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், கொடுத்ததை கொடுத்தால் வாக்குகளை பெற்று விடலாம் எனும் நிலையில், தான் தேர்தலை சந்திப்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதனால் தற்போது தேர்தலைப் புறக்கணித்து விட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் 39 வேட்பாளர்களை தயார் செய்ய உள்ளேன்.
 
மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்னை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஆனால் எனது நிலைபாட்டை விளக்கிவிட்டு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனும் முடிவை எடுத்துள்ளேன் என்றும் கூறினார்.
 
முன்னதாக டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில், ‘மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் அதிமுக, திமுக சந்திக்கின்ற முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல் களம். இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணியென்று சேர்ந்திருக்கிறார்கள் பக்க பலம். அதைத்தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரிட்சை. இதில் நான் என்ன செய்யப்போகிறேன் புது சிகிச்சை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் லட்சிய திமுக நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments