Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட மு.க.ஸ்டாலின் கோரிக்கை

மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட மு.க.ஸ்டாலின் கோரிக்கை
, புதன், 29 ஜூலை 2015 (22:46 IST)
மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் என அரசுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் உடல் ராமேஸ்வரத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கலாமுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
 
பின்பு, அவர் கூறுகையில், இந்தியர்களின் உந்து சக்தியாகவும், தன்னலமற்ற மாமனிதராகவும், தன் இறுதி மூச்சு வரை நாட்டுக்காக உழைத்த டாக்டர் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
 
அவர் விட்டு சென்ற கொள்கைகள் நம்மை வழி நடத்தும். மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் என்றும் ராமேஸ்வரத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil