Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’கள்ளக்காதல் மோகத்தால் குழந்தைகளை விஷம்வைத்துக் கொன்றேன்’ - தாய் வாக்குமூலம்

’கள்ளக்காதல் மோகத்தால் குழந்தைகளை விஷம்வைத்துக் கொன்றேன்’ - தாய் வாக்குமூலம்
, வியாழன், 8 அக்டோபர் 2015 (16:27 IST)
கள்ளக்காதல் மோகத்தால் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றேன் என்று கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

 
ஈரோடு அருகே காளிங்கராயன் பாளையத்தை அடுத்த மணக்காட்டூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (25). இவருக்கும் இவரது கணவர் ஈஸ்வர்னுக்கும் (29) இடையே கறுத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இவர்களுக்கு மகன்கள் நித்திஷ் (5), அன்பரசு (2) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் தனது வீட்டில் படுத்து இருந்த நித்திஷ், அன்பரசு இருவரும் சளிக்கு மாத்திரை வாங்கி கொடுத்ததால் இறந்து விட்டனர் என்று தாய் ரஞ்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
ஆனால், குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சங்கீதாவின் கணவர் ஈஸ்வரன் புகார் அளித்திருந்தார். இது குறித்து சித்தோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த வழக்கில் ரஞ்சிதாவை காவல் துறையினர் திடீர் என்று கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக 2 குழந்தைகளுக்கும் ரஞ்சிதா உணவில் விஷம் வைத்து வைத்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
 
இது குறித்து சங்கீதா அளித்துள்ள வாக்குமூலத்தில், “எனக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவரை பிரிந்து வாழ்ந்த நான் அவருடன் சேர்ந்துவாழ ஆசைப்பட்டேன்.
 
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டியது இருந்தால் 2 குழந்தைகள் இடையூறாக இருக்குமே என எண்ணினேன். இதனால் சம்பவத்தன்று குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொன்றேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil