தனிப்படையா? எனக்கு தெரியாதுங்க... சிலாய்க்கும் எச்.ராஜா!!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (12:35 IST)
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தன்னை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை குறித்து தெரியாது என கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல் துறை மற்றும் நீதித்துறையை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழ்த்தமாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  
 
இதனையடுத்து உயர்நீதிமன்றம் ஹெச்.ராஜா மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் 2 தனிப்படையினர் ஹெச்.ராஜாவை கஷ்டப்பட்டு வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் வேளையில், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது ராஜாவிடம் நீங்கள் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என  செய்தியாளர்கள் கேட்டனர். மேலும் உங்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறினர்.
 
இதற்கு பதிலளித்த எச்.ராஜா நான் தலைமறைவாக இல்லை, மேலும் தனிப்படைகள் குறித்தும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments