தொடரும் அவலங்கள் - மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (11:10 IST)
பூந்தமல்லியில் குடும்ப தகராறின் காரணமாக கணவன் மனைவியைக் கொன்றுவிட்டு தானின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக குடும்பபிரச்சனையின் காரணமாக கணவன் மனைவியை கொல்வதும், மனைவி கணவனை கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இவர்கள் செய்யும் பிரச்சனைகளால் அவர்களின் சின்னஞ்சிறு குழந்தைகள் அனாதையாய் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
 
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் துர்கா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
 
வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்றும் வெங்கடேசன் குடித்துவிட்டு வர, துர்கா வெங்கடேசனிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவி துர்காவை கொலைசெய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்பொழுது அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளும் பெற்றோரை இழந்து அனாதையாய் தவிக்கின்றனர்.
 
இச்சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments