Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசத்திற்கு மறுப்பு: திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (11:43 IST)
திருமணம் நடந்து முடிந்து ஒரே மாதமே ஆன நிலையில் உல்லாசத்திற்கு மறுத்ததால், மனைவியை கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். நான் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பவானி. பவானி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார்.
 
இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. செந்தில் 7ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளதால் பவானி அவரை மதிக்காமல் இருந்துள்ளார். மேலும் அவருடன் குடும்பம் நடத்தவும் மறுத்துள்ளார்.
 
இதனால், பவானியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 18ஆம் தேதி மாலை பவானியை கோவிலுக்கு செல்வதாக கூறி, அழைத்து சென்றுள்ளார். கோவில் பூட்டிப்பட்டு கிடந்ததை அடுத்து, அருகே இருந்த குளக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
 
அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். செந்தில்குமார் மது அருந்தியிருப்பதை தெரிந்து கொண்ட பவானி, அதற்கு இணங்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கயிறை எடுத்து, பவானியின் கழுத்தை சுற்றி இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் குளத்தில் தூக்கு எறிந்துள்ளார்.
 
இந்நிலையில், குளத்தில் பிணமாக கிடந்த பவானியை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் செந்தில்குமார் சிக்கி கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

லிப்டில் சிக்கி கொண்ட 3 பாஜக எம்.எல்.ஏக்கள்.. 20 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

15 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய மர்ம நபர்கள்.. தீக்காயத்துடன் ஓடி வந்து உதவி கேட்ட சிறுமி..!

20 ரூபாய் கொடுக்க மறுத்த அம்மாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மகன்.. இரவு முழுவதும் பிணம் அருகே கண்ணீர்..!

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments