Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் சண்டை, பல ஆண்களுடன் உறவு: வாழ்க்கையை இழந்த இளம்பெண்!

கணவருடன் சண்டை, பல ஆண்களுடன் உறவு: வாழ்க்கையை இழந்த இளம்பெண்!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (16:20 IST)
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளோ ஆரல்வாய்மொழியில் திருமணமாகி கணவருடன் சண்டைப்போட்டுவிட்டு தனியாக வாழ்ந்து வந்த 27 வயது பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.


 
 
ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆதித்தன் என்பவரும் ஷாலினி என்பவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
 
செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த ஆதித்தன் அடிக்கடி மனைவி ஷாலினிக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி ஷாலினியை சந்தித்து பணம் கொடுக்க சென்றுள்ளார் ஆதித்தன். அப்போது படுக்கை அறையில் நிர்வாண நிலையில் ஷாலினி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆதித்தன்.
 
இதனையடுத்து ஷாலினியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 20-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து போலீஸாரின் சந்தேகம் ஷாலினியின் கணவர் ஆதித்தன் மீது திரும்பியது.
 
பின்னர் ஆதித்தனிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் கொலையை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், ஷாலினிக்கு பணம் கொடுக்க அவர் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்து 2 இளைஞர்கள் வெளியே சென்றதை கண்டவுடன் ஆத்திரம் அடைந்து ஷாலினியுடன் வாக்குவாதம் செய்து தலையணையால் அழுத்தியும், கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
 
மேலும், ஷாலினி பல ஆண்களுடன் தொடர்பில் உள்ளதால் அவர்கள் மீது கொலையை திசை திருப்பும் நோக்கில் ஷாலினியை நிர்வாணமாக்கி, பீரோவில் இருந்த பொருள்களை வீசிவிட்டு பின்னர் வழக்கம் போல் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதாக கூறியுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments