Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குக் கூப்பிட்ட குடிகார கணவர் – மறுத்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (09:46 IST)
குடிகார கணவரோடு சேர்ந்து வாழ மறுத்த மனைவியைக் கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மோகனேஸ்வரி என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்றது.. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கோபியின் குடிப்பழக்கத்தால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்துள்ளது.

இதனால் கோபியை பிரிந்த மோகனா, தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகனாவை தனியாக சந்தித்த கோபி அவரை தன்னோடு வாழ அழைத்துள்ளார். ஆனால்  அதற்கு மோகனா சம்மதிக்காமல் வர மறுத்துள்ளார். இதனால் கோபமான கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனாவைக் குத்திவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

இந்நிலையில் அக்கம்பக்கதினர் வந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறை கோபி மேல் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments