Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்

தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (15:28 IST)
அந்தியூர் அருகே தூங்கி கொண்டிருந்த மனைவியை அவரது கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.


 
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). இவரது மனைவி பழனியம்மாள் (46). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களது மகள்  மாலதிக்கு (25) திருமணமாகி விட்டது. மகன் குருசாமி என்ற மகனுக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். ராமச்சந்திரனுக்கு மனைவி பழனியம்மாள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ராமச்சந்திரன் வெளியே சென்று விட்டார்.

இரவு வீட்டில் பழனியம்மாளும் மகள் மாலதியும் தூங்கி கொண்டிருந்தனர். மகன் குருசாமி மாமனார் வீட்டுக்கு போய் விட்டார். நள்ளிரவில் ஆத்திரத்துடன் அங்கு வந்த ராஜேந்திரன் அரிவாளால் தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டினார். இதில் பழனியம்மாள் கழுத்தில் பலமான வெட்டுகள் விழுந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அருகே படுத்திருந்த மகள் மாலதி எழுந்து பயத்துடன் வெளியே ஓடி சென்று சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். இதை அடுத்து, ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து மாயமான ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments