Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் மனிதக் கடத்தல் தடுப்பு உலக தின விழிப்புணர்வு பேரணி

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (21:14 IST)
கரூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனிதக் கடத்தல் தடுப்பு உலக தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர் நீதிபதி கிறிஸ்டோபர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நடத்திய மனிதக் கடத்தல் தடுப்பு உலக தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைமை நீதிபதி கிறிஸ்டோபர் நீதிமன்ற வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மனிதனை மனிதனே விலைக்கு வாங்கி அடிமையாக பயன்படுத்தும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது. 
 
இதனை தடுக்கும் விதமாக ஐ.நா.பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் அந்த செயல் மாற்று வடிவம் பெற்று தற்போது கொத்தடிமைகளாக நடத்தும் சூழல் மறைமுகமாக எங்கும் உள்ளது. 
 
இதனை தடுப்பதற்காகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காகவும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 
 
அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியில் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கி கரூர் அரசு கலைக்கல்லூரி வரை சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments