Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? தொகுதி பங்கீடு குறித்து தி.மு.கவுடன் நாளை பேச்சுவார்த்தை.!!

Senthil Velan
சனி, 27 ஜனவரி 2024 (16:44 IST)
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.
 
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர்.
 
விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவன் செல்லும் அவர்கள்,  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். 

ALSO READ: பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.! தமிழகம், புதுச்சேரிக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு..!!
 
பின்னர் மாலை 3 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments