10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையத்தில் பெறுவது எப்படி?

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (13:22 IST)
தமிழகத்தில் கடந்த 15.03.2016 முதல் 13.04.2016 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.05.2016 அன்று காலை 09.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 

 
மாணவர்கள் உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க தடை ஏற்படக் கூடாது என்பதற்காக தற்காலிக சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை அறிந்த மாணவ - மாணவிகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 01.06.2016 முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற http://www.dge.tn.nic.in/ இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வரலாற்றில் இடம் பிடித்தார் ஓபிஎஸ்.. ஒரு கட்சியில் 3 முறை முதல்வராக இருந்தவர் இன்னொரு கட்சியில்..

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!.. எந்த தொகுதி தெரியுமா?..

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்.. இனி மாம்பலம், கிண்டி மற்றும் எழும்பூர் மட்டுமே நிற்கும்..!

இன்று அண்ணா அறிவாலயம் செல்லும் ஓபிஎஸ்.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments