Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வீட்டை 7 பேருக்குக் காட்டி 70 லட்சம் வரை மோசடி; வீட்டு உரிமையாளர் கைது

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (12:27 IST)
திருப்பூரில் ஒரே வீட்டை 7 நபர்களுக்கு காட்டி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 
மக்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படும் சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு அவினாசி பிச்சம்பாளையம் லக்கி நகரில், ஒரு சொந்த வீடு இருக்கிறது. முத்துக்குமார் தன் வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி, குமார் என்பவரிடமிருந்து ரூ. 7 லட்சத்தை பெற்றுள்ளார். குமார் முத்துக்குமாரிடம் நான் தான் பணம் கொடுத்துவிட்டேனே, வீட்டின் சாவியை கொடுங்கள் என்று கேட்டதற்கு வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் இன்னும் வீட்டை காலி செய்ய வில்லை. அவர்கள் காலி செய்த பின்னர் நீங்கள் குடியேறலாம் என்று கூறி காலம் கடத்தி வந்தார்.
இதனால் சந்தேகமடைந்த குமார்,  முத்துக்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் முத்துக்குமாரை பிடித்து விசாரித்ததில் ஒரே வீட்டை, பலருக்கு காட்டி 70 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments