Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் - உள்துறை செயலாளர் அமுதா

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (21:20 IST)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உள்துறை செயலாளர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள  உணவுப் பொருட்கள்  லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குரி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments