Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் பிரசாதம், அர்ச்சனை வேண்டாம்! – அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:23 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கோவில்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவில்களுக்கு வரும் பக்தர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கோவில் வளாகங்களில் சானிட்டைசர், கிருமி நாசினி கை கழுவ வைக்கவேண்டும்

கோவில்களுக்கு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தலாம்.

கோவில்களில் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் கொண்டு அர்ச்சனை செய்வது, மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம், துளசி நீர் தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டுகோள்.

இதுதவிர திருவிழா நடந்து வரும் கோவில்களில் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை, சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து பாதுகாப்பான முறையில் திருவிழாவை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments