Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திமுகவில் இருந்து இந்து உணர்வாளர்கள் வெளியேற வேண்டும்’’ - எச்.ராஜா அதிரடி

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (23:09 IST)
இந்து மதத்தை விமர்சிப்பதால் அவரது கட்சியில் உள்ள இந்து உணர்வாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.


 

இது குறித்து எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தபால் நிலையங்களில் கங்கை நீர் விநியோகிக்கப்படுவது குறித்து திமுக தலைவர் கலைஞர் கிண்டலடித்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து கிண்டலடிக்கும் அவர், மற்ற மதத்தினரின் செயல்பாட்டை பற்றி வாய் திறப்பதில்லை.
 
மசூதிக்கு, தமிழக அரசு அரிசி வழங்குவது குறித்து கலைஞரால் விமர்சிக்க முடியுமா? தபால் நிலையங்களில் கடிதம் அனுப்புவது குறைந்து விட்டது. இதனால் தபால் நிலைய பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கும் வகையில் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
 
ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் கலைஞர் விமர்சிப்பது சரியல்ல. தொடர்ந்து அவர் இந்து மதத்தை விமர்சிப்பதால் அவரது கட்சியில் உள்ள இந்து உணர்வாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’’ என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments