Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டம்! – வெறிச்சோடிய கோவை, திருப்பூர்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (10:03 IST)
இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணியினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

ALSO READ: நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? கொந்தளித்த ஆ.ராசா

ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவை தெரிவித்த நிலையில் ஆ.ராசா அதற்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்தது.

இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் கோவை அன்னனூர், திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி உள்ளிட்ட சில பகுதிகளில் காலையிலிருந்து கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

65 வயது பெற்ற தாயை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்த மகன்.. தகாத உறவுக்கு தண்டனை என விளக்கம்..!

ராகுல் காந்தியின் ‘வாக்காளர் உரிமை’ யாத்திரை இன்று தொடக்கம்.. தேர்தல் ஆணையத்தை சந்திக்க மறுப்பு..!

தீபாவளி விடுமுறை ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்.. 20% தள்ளுபடி கட்டணம்..!

டீக்கடைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்.. 10 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. அனைவரும் கைது..!

ஏஐ வீடியோ மூலம் மக்களை தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments