Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (19:24 IST)
இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில்  நியூ  இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

“இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் - இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும் - இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்" என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில்  நியூ  இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் - தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது.

தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியூ இந்தியா அசூரன்ஸ் உடனே திரும்பப்பெற வேண்டும்! ‘’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments