Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை.. ஆய்வுக்கு பின் நீதிபதிகள் சொன்னது என்ன?

Mahendran
வியாழன், 6 மார்ச் 2025 (11:36 IST)
சென்னை புழல் மத்திய சிறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் திடீரென சோதனை மேற்கொண்டனர். சிறை வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்த அவர்கள், கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதாகவும், வாரத்தில் இரண்டு முறை சிக்கன் மற்றும் முட்டையுடன் சுகாதாரமான உணவு கைதிகளுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
 
மேலும், கைதிகள் வாரத்தில் மூன்று முறை வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதி பெற்றுள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதிகள் மாதம் ரூ.7,500 சம்பளத்துக்கு பெட்ரோல் பங்கில் பணிபுரிகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
அதேசமயம், இலவச சட்ட ஆலோசனை வழங்க, வெளிநாட்டு கைதிகளுக்கு தொலைபேசி வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறை மருத்துவமனைக்கு சிறந்த உள் கட்டமைப்பு தேவை என்றும் நீதிபதிகள் சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 
 
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5000+ புது செல்போன்களை கண்டெய்னரோடு தூக்கிய கும்பல்! - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

பாஜக கூட்டணியில் தவெக இணைகிறதா? எனக்கு தெரியாது என்கிறார் நயினார் நாகேந்திரன்..!

234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

உருண்டு வந்த குழாய்கள்.. நொறுங்கிய வாகனங்கள்! தஞ்சாவூரில் ஒரு Final Destination! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments