Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மூலிகை பெட்ரோல் மோசடி’ - ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (07:18 IST)
'மூலிகை மூலம் பெட்ரோல்' தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக கடந்த 1999 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ராமர் பிள்ளை என்பவர் கூறிவந்தார்.


 
 
மேலும், ராமர் பிள்ளை, 'மூலிகை மூலம் பெட்ரோல்' தயாரிக்கும் முறையை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் முன்னர், செய்து காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
இதை அடுத்து, ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றம் செய்து விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களையும் துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். 
 
ஆனால், அவரால் விற்பனை செய்யப்பட்ட எரிபொருளை பயன்படுத்திய பெரும்பாலான வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.
 
சாதாரண பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என்ற பெயரில் விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. அத்துடன் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் இன்று ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments