Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை தீவிரம்.. கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை..!

Siva
புதன், 16 அக்டோபர் 2024 (19:10 IST)
கேரளாவில் பருவமழை கடுமையாக துவங்கியுள்ள நிலையில், இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தென்மேற்கு பருவமழைக்கு பின், கேரளாவில் வடகிழக்கு பருவமழை இப்போது தொடங்கி, அதிக வலிமையுடன் பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
 
அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை ஏற்படும் என வானிலை ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 21ஆம் தேதி வரை இந்த மழை நிலைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதி வரை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இன்று கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. . இதேபோல், மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு, அதிகபட்சமாக 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பத்தனம்திட்டா, அலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
நாளைய தினம் கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments