Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (14:25 IST)
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் கனமழை மற்றும் அதிகனமழை குறித்து எச்சரிக்கை வரும் நிலையில் தற்போது கோடையில் அதுவும் அக்னி நட்சத்திர நேரத்தில் அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் வரை தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தஞ்சாவூர் ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது . மேலும் இந்த இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments