Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (19:24 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சதுரகிரி பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 24 ஆம் தேதி முதல்  28 ஆம் தேதி வரை 5 நாட்கள்  பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த  நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே கனமழை காரணமாக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் பரதோஷம், பவுர்ணமி நாட்களில் சதுரகிரி மலையேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments