Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 20 மே 2025 (08:03 IST)
ஒரு பக்கம் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயில் கொளுத்தி வந்தாலும், இன்னொரு பக்கம் சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும், அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் தாக்கம் தமிழகத்துக்குள் இருக்கும் என்று தெரிகிறது.
 
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் பல பகுதிகளிலும், தென் தமிழகத்திலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். அதே போல், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல், மே 23ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மேலும், மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments