Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் வரப்போகுது: மழை வேற அடிச்சு ஊத்த போகுதாம்... மக்களே ஜாக்கிரதை

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (15:19 IST)
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கஜா புயல் கரையை கடந்த போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்பகளை சந்தித்தது. இந்த பாதிப்பக்களை சீரமைக்கும் பணிகள் இன்னும் நடந்து வருகிறது. 
 
இவ்வாறு இருக்கையில், அடுத்து மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாலத்தீவு, இலங்கைக்கு தெற்கு பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாம். 
 
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை அதாவது 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மாலத்தீவு அருகே தீவிரமாக இருக்கும். இதனால் வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியிருக்க கூடிய உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்.
அடுத்து, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அமைந்திருக்க கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதால் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மழையின் அளவு அதிகமாக இருக்குமாம். 
 
ஆக மொத்தம் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, காரைக்காலுக்கும் சேர்த்து நல்ல மழை அடிச்சு ஊத்த போகுதாம். டிசம்பர் என்றாலே ஒரு வித பயம் மக்கள் மத்தியில் இருக்கும் என பட்சத்தில் இவ்வாறான மழை குறித்த தகவல்கள் பீதியைத்தான் ஏற்படுத்துகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

சீமான் ஒரு கிணற்று தவளை: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்..!

டெஸ்லா காரை ஓட்டி பார்த்த துணை முதல்வர்.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ வைரல்..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments