Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (07:25 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேற்கண்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments