Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:19 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி,  திண்டுக்கல்லில் மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2.30 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி குமரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழை  பெய்யும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments