Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் கொட்டித்தீர்ந்தது கனமழை! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (20:30 IST)
குடி போதையில் ஒருவர் மழை பெய்கின்றதா ? என பார்த்து பார்த்து சென்ற காட்சி பரவலாகி வருகிறது.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மாலை பொழுதில் திடீரென்று கார்மேகம் சூழ ஆங்காங்கே காட்சியளித்த நிலையில், இன்று இரவு 8.00 மணியளவில் கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை, காமராஜ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சுமார் 30 நிமிடம் கனமழை வெளுத்து வாங்கியது.

சுமார் 30 நிமிட மழையிலேயே மார்க்கெட் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில் குடி போதையில் ஒரு முதியவர் மழை நின்றதா ? என்று பார்த்து பார்த்து சென்ற காட்சி மக்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த திடீர் கனமழையால் ஆங்காங்கே மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments